Kongu Samayal

புழுங்கலரிசி இலை வடாம்

புழுங்கலரிசி இலை வடாம்
 
தேவையானவை
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், 
மிளகு -  (ஒன்றிரண்டாக பொடிக்கவும்) - ஒரு டீஸ்பூன், 
சீரகம் - ஒரு டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை:  
அரிசியைத் தண்ணீரில் கழுவி 1 அல்லது 2 மணி நேரம் ஊற வைக்கவும். 
பின்னர் நீரை வடித்து, தேவையான தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். 
மாவை 4 அல்லது 5 மணி நேரம் புளிக்க வைக்கவும் (அதிக புளிப்பு வேண்டாம் என்பவர்கள் 3 மணி நேரம் புளிக்க வைக்கலாம்). 
பிறகு, மாவில் தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு, சீரகம் சேர்த்துக் கலக்கவும். 
வடாம் ஸ்டாண்ட் அல்லது புரச இலை அல்லது வாழை இலையில் மாவை லேசாக ஊற்றி, ஆவியில் வேக வைத்து, வெந்ததும்  எடுத்து உரித்து உடனே சாப்பிடலாம். 
இதை நிழலில் உலர்த்தி எண்ணெயில் பொரிக்கலாம். 
உடனே சாப்பிடும்போது இட்லி மிளகாய்த்தூள், சூடான நெய் சேர்த் துக் கலந்து தொட்டு சாப்பிடலாம்.