Kongu Samayal

ஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி

ஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி
 
தேவையானவை
வாழைக்காய் - ஒன்று, 
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், 
துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், 
சலித்த கடலை மாவு - கால் கப், 
காய்ந்த மிளகாய் - 4, 
தனியா - ஒரு டீஸ்பூன், 
பெருங்காயத்தூள், 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
சோடா உப்பு - ஒரு சிட்டிகை, 
உப்பு - தேவைக்கேற்ப, 
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
 
செய்முறை
இட்லி புழுங்கல் அரிசி, துவரம்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
பிறகு நீரை வடித்து, காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும். 
அரைத்த உடனேயே அதனுடன் கடலை மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். 
ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்துக் கலக்கவும். 
பிறகு, வாழைக்காயை மெலிதாக சீவி மாவில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
தேங்காய் சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ். சோடா உப்புக்கு பதில் ஒரு சிறிய கரண்டி அளவு தோசை மாவு சேர்க்கலாம்.