கிட்ஸ் கேரமல் பனானா
தேவையானவை
மிகவும் பழுக்காத வாழைப்பழம் - 2
மைதா மாவு - அரை கப்
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - அரை கப்
எள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
மைதாவுடன் சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாழைப்பழங்களை விருப்பம் போல துண்டுகளாக்கி வைக்கவும்.
நறுக்கிய பழத் துண்டுகளை மாவுக் கரைசலில் தோய்த்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் மாவில் தோய்த்தெடுத்த பழத் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நுரைத்து நிறம் மாறும் பதம் வரும் வரை கிளறி கேரமல் தயார் செய்து கொள்ளவும்.
பொரித்தெடுத்த பழத் துண்டுகளை கேரமல்லில் போட்டெடுத்து, குளிர்ந்த நீரில் (ஐஸ் வாட்டர்) போட்டு உடனேயே எடுக்கவும்.
ஸ்வீட்டான கிட்ஸ் கேரமல் பனானா தயார்.
விருப்பப்பட்டால் வறுத்த எள்ளை இதன் மீது தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.




















