கச்சாயம்
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்,
பாகு வெல்லம் - அரை கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
நெய் - ஒரு கப்.
செய்முறை:
பச்சரிசியைத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து நிழலில் உலர்த்தி, நைஸாக பொடித்து, சிறிய கண்ணுள்ள ஜல்லடையில் 2, 3 முறை சலிக்கவும்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு வைக்கவும்.
பாகு உருண்டை பதம் வந்தபின் அதில் மாவை கொட்டிக் கிளறவும். (எப்போதும் மாவு அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்).
கிளறிய மாவை எடுத்துப் பார்க்கும்போது மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது... லூஸாகவும் இருக்கக் கூடாது.
மாவின் மீது நெய் தடவி வைக்கவும் (மாவை உபயோகிக்கும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்).
அடுத்த நாள் வாழை இலையில் நெய் தடவி, மாவை உருட்டி வைத்து, லேசாக தட்டவும். கடாயில் நெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்த கச்சாயத்தை போட்டு, உடனே திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இதனுடன் தேங்காய் துருவல், நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து சாப்பிடவும்.