வெஜ் ராகிமாவு ஊத்தப்பம்
தேவையானவை
ராகிமாவு -1கப்
இட்லிமாவு -1/4கப்
சின்னவெங்காயம் -5
கேரட்துறுவல் -1/4கப்
பச்சைமிளகாய் -1
இஞ்சி -சிறுதுண்டு
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு
எண்ணை -தேவையான அளவு
செய்முறை
வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ராகிமாவு,இட்லிமாவு,சிறிது உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைக்கவும்.
அத்துடன் நறுக்கியவற்றை போட்டு கேரட்துறுவலையும் போட்டு நன்கு கலக்கவும்.
1/2மணி நேரம் கழித்து தோசைக்கல்லை அடுப்பில்வைத்து காய்ந்தவுடன் ஒருகரண்டி மாவு ஊற்றி சிறிது பரப்பிவிட்டு 1ஸ்பூன் எண்ணை சுற்றி ஊற்றவும்.
மூடிவைத்து வேகவிடவும்.அடுப்பை சிம்மில்வைக்கவும்.
சிறிது வெந்தவுடன் திறுப்பிபோட்டு இருபக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.சுவையான வெஜ் ராகிமாவு ஊத்தப்பம் ரெடி.இதை அப்படியே சாப்பிடலாம்.