வெஜ் ரொட்டி ரோல்
தேவையானவை
பொடியாக நறுக்கிய காய்கறி கலவை - ஒரு பெரிய கப்
சப்பாத்தி - 4
மிளகு - சிறிது
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - சிறிது
சாம்பார் தூள் / மிளகாய், தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
வேக வைத்த பட்டாணி - அரை கப்
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் காய்கறி கலவையைச் சேர்த்து வதக்கவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை அரைத்து, காய்கறிக் கலவையில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போக வதங்கியதும், தூள் வகைகளைச் சேர்த்து பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் விட்டு மசாலா வாசனை போக கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது வேக வைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து பிரட்டி இறக்கவும்.
தோசை கல்லைச் சூடாக்கி அதன் மேல் ஒரு சப்பாத்தியைப் போட்டு அதன் நடுவில் தயார் செய்த மசாலாவை வைத்து சுருட்டி மூடிவிடவும்.
டேஸ்டி வெஜ் ரொட்டி ரோல் ரெடி.
குறிப்பு:
சப்பாத்தியை சுருட்டும் போது உடையாமல் இருப்பதற்காக முக்கால் பங்கு மல்டிக்ரெய்ன் ஆட்டாவும், கால் பங்கு மைதாவும் பயன்படுத்தி சப்பாத்தியை தயார் செய்துக்கலாம். வெறும் கோதுமை மாவு என்றால் மைதா மாவு சேர்க்கத் தேவையில்லை.
குழந்தைகளுக்கு கொடுக்க உள்ளே துருவிய சீஸ் கூட சேர்க்கலாம்.