கிட்ஸ் ஸ்வீட் கோன் பூரீஸ்
தேவையானவை
பூரிக்கு பிசைந்த மாவு - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
வட்ட வடிவ மூடி - ஒன்று (நடுத்தர அளவு)
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
மாவு பூரிக்கு பிசைவது போலவே இருந்தால் போதும்.
சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும்.
சிறிது மாவை எடுத்து உருட்டி, சப்பாத்தி போல் தேய்க்கவும்.
பிறகு அதன் மீது வட்ட வடிவ மூடியை வைத்து அழுத்தி வட்டமாக வெட்டி எடுக்கவும்.
வெட்டி எடுத்ததை கோன் போல செய்து, அதன் அடிப்பகுதியை மிதமாக அழுத்திவிடவும்.
இதே போல் மீதமுள்ள மாவிலும் கோன் போல தயார் செய்யவும்
அவற்றை சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்
எண்ணெய் வடிந்ததும் பொடித்த சர்க்கரையில் போட்டுப் பிரட்டி எடுக்கவும்.