Kongu Samayal

ஓட்ஸ் அடை

ஓட்ஸ் அடை
 
தேவையானவை
 
ஓட்ஸ் - ஒரு கப்
கடலைப்பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
பெரிய வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு சிறிய கட்டு
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை
 
பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து 3 முறை கழுவிவிட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். ஊற வைத்த பருப்பு வகைகளுடன் சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும்.
அதனுடன் பொடி செய்த ஓட்ஸ் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்
தோசை கல்லைச் சூடாக்கி, மாவை மெல்லிய தோசை போல ஊற்றி எண்ணெய் விட்டு வேகவிடவும்.
சற்று நேரம் கழித்து திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான, சத்து நிறைந்த ஓட்ஸ் அடை தயார்.