Kongu Samayal

தக்காளி தோசை

 

தக்காளி தோசை

தேவையானவை
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், 
துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், 
தக்காளி - 4 (நறுக்கவும்), 
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - 4, 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
தனியா - 2 டீஸ்பூன், 
பெருங்காயத்தூள் - சிறிதளவு, 
இஞ்சி - சிறிய துண்டு, 
உப்பு, 
எண்ணெய் - தேவையான அளவு.
 
செய்முறை:  
அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி, ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு, கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை (எண்ணெய், வெங்காயம் நீங்கலாக) சேர்த்து கொரகொரவென்று அரைத்து, வெங்காயத்தை சேர்க்கவும். மாவை ஒரு மணி நேரம் புளிக்கவிடவும். 
பிறகு, சூடான தோசைக்கல்லில் மாவை மெலிதான தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, முறுகலானதும் திருப்பிப் போட்டு, நன்றாக மொறுமொறுவென்று வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
இதற்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம்.