மகிழம்பூ முறுக்கு
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - 4 கப்,
பொட்டுக்கடலை மாவு - ஒரு கப்,
பெருங்காயம் - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 6 அல்லது 7,
வெண்ணெய் - சிறிதளவு,
எள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்னர் காய்ந்த மிளகாய், பெருங் காயம், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும்.
அதனுடன் பொட்டுக்கடலை மாவு, தண்ணீரில் சுத்தம் செய்த எள் மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
மாவை மகிழம்பூ அச்சில் (கடைகளில் கேட்டால் கிடைக்கவும்) போட்டு, காய்ந்த எண்ணெயில் முறுக்குகளாக பிழிந்து, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.