பாசிபருப்பு ஒப்புட்டு
தேவையானவை
பாசிபருப்பு -1கப்
மைதாமாவு -1கப்
வெல்லம் -3/4கப்
தேங்காய்துறுவல் -2ஸ்பூன்
ஏலக்காய் -4
நெய் -2ஸ்பூன்
எண்ணெய் -சிறிதளவு
செய்முறை
பாசிப்பருப்பை தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
மைதாமாவுடன் தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைத்துவைக்கவும்.
வேகவைத்த பருப்புடன்,வெல்லம்,ஏலக்காய்,தேங்காய்துறுவல் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் 2ஸ்பூன் நெய்விட்டு அரைத்த கலவையை போட்டு கிளறவும்.அதில் உள்ள தண்ணீர் குறைந்து கெட்டியானவுடன் இறக்கி ஆறவிடவும்.
ஆறிய கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடித்துவைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில்வைத்துசூடாக்கவும்.
உருட்டிய பருப்புகலவையை மைதாமாவில் பிரட்டி தோசைக்கல்லில்வைத்து வடைபோல் தட்டிவிடவும்.
சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பிபோட்டு இரண்டுபக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.