கேள்வரகு – ராகி களி
தேவையானவை:
4 டம்ளர்* தண்ணீர்
2 டம்ளர்* கேள்வரகு – ராகி மாவு
* 225ml அளவு டம்ளர்(காபி டம்ளர்).
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 4 டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்தவுடன் கேள்வரகு மாவை கொஞ்சம் கொஞ்சமாய் கொதிக்கும் நீரில் போட்டுக் கொண்டே கிளறவும்.கட்டி கட்டாமல் கிளறுதல் முக்கியம்.(ரவா கிண்டுதல் போல.)
பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
மாவு அடியில் ஒட்டாது கிளறிக் கொண்டே இருக்கவும்.
மாவு கட்டி கட்டியிருந்தால் உடைத்துவிட்டு கிளறவும்.
மாவு கலவை இறுகி களி போல வந்ததும் இறக்கி பரிமாறலாம்.
களி சூடாக உண்டால் ருசி அதிகம்.