கார அச்சு முறுக்கு
தேவையானவை:
பொன்னி பச்சரிசி - 2 கப்,
காய்ந்த மிளகாய் - 5,
சலித்த பொட்டுக்கடலை மாவு - கால் கப்,
சுத்தம் செய்த எள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.
இதனுடன் பொட்டுக்கடலை மாவு, எள் சேர்த்துக் கரைக்கவும் (மாவு தண்ணியாக இருக்கக் கூடாது. பஜ்ஜி மாவு பதம் இருக்க வேண்டும்).
கடாயில் முறுக்கு அச்சு முழுகுமளவுக்கு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அச்சை எண்ணெயில் போடவும்.
அச்சு சூடானதும், வெளியில் எடுத்து மாவில் தோய்த்து பிறகு கைப்பிடியை பிடித்துக்கொண்டு எண்ணெயில் விடவும்.
அச்சில் உள்ள மாவு கழன்று விழுந்துவிடும். மாவு விழவில்லை என்றால், நீண்ட கம்பியால் தள்ளிவிடலாம்.
முறுக்கு இருபுறமும் வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.
குறிப்பு: மாவை அரைத்தவுடன் முறுக்கு செய்யவும். மாவு புளிக்கக் கூடாது.